Editorial / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன்லெம்பேட்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்இதலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களின் விசாரணை வியாழக்கிழமை (06) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.இதன் போது குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்குதலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே? இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுநிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுஇருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி (19-02-2026) மன்னார் நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டார்.
4 minute ago
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
39 minute ago
57 minute ago