Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை கொடுப்பதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பில் பாகுபாடு உள்ளதாக கூறி வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே மத்திய அரசு மேற்கண்டவாறு தெரிவித்தது.
தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக அதிகரித்து, இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை என பொது நல வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் அரசு பீளிடர் முத்துகுமார் ஆஜராகியிருந்த
ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம். மேலும் மகப்பேறு விடுமுறையை 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக அதிகரித்து கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றார்.
அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago