2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

374 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 374 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 74 பேருடன் ஈ.கே-648 என்ற விமானம் நேற்று (06) இரவு 11.20 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.

பின்னர் மாலைதீவில் இருந்து யு.எல்-104 என்ற விமானத்தில் இரவு 11.45 மணியளவில் 10 பேர் நாடு திரும்பினர்.

அத்துடன், தென்கொரியாவில் இருந்து 285 பேர் இன்று (07) அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்தவர்களுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .