Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறு அருகே 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரிக் இயந்திரம் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தற்போது 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் பள்ளம் தோண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே 2ஆவது ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தில் உள்ள போல்டுகள் சேதமடைந்து இருப்பதால் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026