2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

6 இராஜதந்திரிகள் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை இன்று (20) முற்பகல் கையளித்தனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் விபரங்கள் வருமாறு:

  1. வின்சென்ட் சுமேல் (Vincent Sumale): பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).

2. அப்துல்லாஹி முகமது ஒடோவா (Abdullahi Mohammed Odowa): சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).

3. கிறிஸ்டியன் பீவர் (Christian Biever): லக்சம்பர்க் தூதுவர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).

4. மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக் (Monsignor Andrzej Józwowicz): வத்திக்கானின் அப்போஸ்தலிக்க தூதுவர் (இலங்கையைத் தளமாகக் கொண்டவர்).

5.மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர் (Nayyar Naseer): பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர்.

6.சலே முபாரக் அல்-சரவி (Saleh Mubarak Al-Sarawi): குவைத் நாட்டின் தூதுவர்

நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்ததைத் தொடர்ந்து, புதிய தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .