2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

8 தீவிரவாதிகள் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த 8 தற்கொலைக் குண்டுதாரிகளும் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளமைத் தொடர்பில், புலனாய்வு பிரிவினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், கெப் ரக வாகனம் ஒன்று என்பன குறித்த தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக் மொஹமட் அஸாமின் பெயரில் 3 மோட்டார் சைக்கிள்களும் வானொன்றும் கெப் ரக வாகனமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .