Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று (31) மிகவும் சுமூகமான நிலையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக கெப்பே அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், 80 சதவீதமான தபால் வாக்குகள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று (01) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 59 ஆயிரத்து 30 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் இடம்பெறும். தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தபால் மூல வாக்களிக்க முடியும்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026