Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவை தரகருக்கு கொடுத்து, போலியான ஆவணங்களை தயாரித்து, ‘Greek’விசாவை பயன்படுத்தி, ஐரோப்பிய நாடுக்கு தப்பியோடுவதற்கு வருகைதந்திருந்த நால்வர் அடங்கிய வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (24) பிற்பகல் வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாத்தாண்டியவை வசிப்பிடமாகக் கொண்ட வாகன வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகரான 43 வயதான நபர், அவருடைய மனைவி (வயது 47) மற்றும் 21, 16 வயதுகளைச் சேர்ந்த அவ்விருவரின் மகன்மார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் அதிக பணிச்சுமை இருப்பதால், அந்த நாடுகளுக்கு விசா வழங்குவது "குளோபல் விசா வசதி சேவை"( Global Visa Facilitation Service ) என்ற அமைப்பால் செய்யப்படுகிறது.
தரகர், இந்த தொழிலதிபரை இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று வாக்குறுதி அளித்த பணத்தை கொடுத்து இந்த விசாக்களை கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் Gulf Airlines GF-145 விமானத்தில் செல்வதற்காக இந்த வணிக குடும்பம் சனிக்கிழமை (24) மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
முதலில் பஹ்ரைன் சென்றுவிட்டு மற்றொரு விமானத்தில் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள், வளைகுடா விமான சேவை அதிகாரிகளுக்கு அனுமதி பெறுவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில், "கிரேக்க" வீசாக்கள் குறித்து சந்தேகம் அடைந்து, அவர்களை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசாக்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்போது இந்த தொழிலதிபர் தனக்கு நேர்ந்ததை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதோடு, தனக்கு இந்த "கிரேக்க" விசாக்களை ஏற்பாடு செய்த தரகரும் இவ்வாறு பணம் பெற்று மேலும் 20 பேருக்கு "கிரேக்க" விசா வழங்கியதாக மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குடிவரவு குடியகழ்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
22 minute ago
38 minute ago
40 minute ago