Editorial / 2024 ஜூன் 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நல்லாட்சி முறையினை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை வெற்றிகரமானதாக மாற்ற முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது நடக்குமா?
ஜூன் 12ம் திகதி சர்வதேச நாணயநிதியம் (IMF) நடைமுறைத்திட்டத்தின் மூன்றாவது பணக் கொடுப்பனவிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.
ஆனால், இலங்கை தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியினை முன்னேற்றுவதற்கு தவறிவிட்டது.
சமீபத்திய வெரிட்டே நிறுவனத்தின் IMF கண்கானிப்பானின் 2024 மே மாத தரவுகளின் அடிப்படையில் டிசெம்பர் 2023 இல் புதிப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி 25 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இத்திட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய 63 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டும் 16 வாக்குறுதிகள் நிறைவேற்றபடாமலும் 15 அறியப்படாமலும் உள்ளன. (தரவுகள் கிடைக்காதபடியினால் உண்மை தன்மையினை கண்டறிய முடியவில்லை.)
நிறைவேற்றப்படாத 16 வாக்குறுதிகளை ஆராயும் பொழுது நல்லாட்சியில் தோல்வி ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.16 வாக்குறுதிகளையும் ஆய்வு செய்யும் பொழுது அவற்றில் 7 நிதிமுகாமைத்துவம், 6 நிதிவெளிப்படைத்தன்மை, 3 ஊழல் எதிர்ப்பு அளவீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
IMF திட்டத்தினால் பொருளாதார நெருக்கடியின் மூலகாரணங்களாக கண்டறியப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றவில்லை. அதாவது நிதிவெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல்எதிர்ப்பு.
ஆசியாவில்முதல்முதலாக நடாத்தப்பட்ட IMF தலைமையில் நல்லாட்சி கண்டறியும் மதிப்பீட்டு அறிக்கை இலங்கையில் செய்யப்பட்டதென்று 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
இதேபோல் இலங்கை சிவில் சமூக அமைப்புதனியாக மேற்கொண்ட நல்லாட்சி கண்டறியும் மதிப்பீடு IMF இனால் மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் பெரிதும் ஒத்துப்போகின்றது. இந்த17வது IMF திட்டம் ஊழல் மற்றும் முறைகேடான ஆட்சி ஆகிய மூலகாரணங்களை கையாளுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சிறப்பான முறையில் தீர்க்குமென்ற நம்பிக்கை இருந்தது.
எவ்வாறாயினும் நல்லாட்சி வாக்குறுதிகளுக்கு IMF சரிவர முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அவை திரும்ப திரும்ப புதிப்பிக்கப்படுகின்றன. IMF அதிகமுக்கியத்துவம் கொடுத்த நிலையான நிதி நடவடிக்கைகள் முந்தைய 16 IMF திட்டங்களிலும் இருந்தவையாகும். தற்போதைய திட்டத்தின் தனித்தன்மையா தெனில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இலங்கை பொருளாதார மீட்சியின் அத்திவாரமாக மாறாவிட்டால் இது கடந்த காலவட்டத்தினை வளர்க்கும் ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும். இது முந்தியதை முடித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையினை இன்னுமொருIMF திட்டத்திற்குள்திரும்பவும் கொண்டு வரும்.
14 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
2 hours ago