2026 மே 15, வெள்ளிக்கிழமை

PHI அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்த தொற்றாளர்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர், பொது சுகாதார பரிசோதகர் அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன், குறித்த பரிசோதகரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பண்டாரகம-அட்டுளுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், குறித்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, அந்த தொற்றாளர் குறித்த அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .