2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

PTAஐ முற்றாக ஒழிக்க அழைப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டுக்கான தமது வரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

பயங்கரவாதத்துக்கான புதிய வரைவிலக்கணத்துடன் பயங்கரவாதக் குற்றமும், தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக, இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் பயங்கரவாதத்தை விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றத்துக்காக சான்றுகள் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை விலக்க வேண்டிய அவசியமில்லை என்பதை  ஆதரிப்பதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .