Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மாயமான உடற்பாகங்களைத் தேடிச்சென்று, மாலபே சைட்டம் (SAITM) தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்கூடத்திலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்ட 26 பேருக்குச் சொந்தமான மனித எச்சங்களை, பொரளை ஜின்டெக் நிறுவனத்திடம் வழங்கி, மரபணுப் பரிசோதனைக்கு (டீ.என்.ஏ) உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வசீம் தாஜுதீன் தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்றபோது, குறித்த தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து எடுத்துவந்த எலும்புக்கூடுகளில், தாஜுதீனின் எழும்புக்கூடுகளும் உள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, மேற்படி எலும்புக்கூடுகளை டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, நீதவானிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறினர்.
குறித்த விளையாட்டு வீரரின் மரணத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனையின் பின்னரே, சடலத்தின் உடற்பாகங்கள் மாயமாகியிருந்தன. அந்த உடற்பாகங்கள், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் இருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, கடந்த 3ஆம் திகதி அங்கு சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அங்கிருந்த 26 எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மாயமான உடற்பாகங்களை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுப்புவதில் பங்குகொண்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தாஜுதீனின் உடற்பாகங்கள், எவ்வாறு மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு, தாஜுதீனின் உடற்பாகங்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை, சட்டத்துக்கு புறம்பான செயலென, அமைச்சர் மேலம் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago