2025 ஜூலை 14, திங்கட்கிழமை

msc magnifica கப்பலில் பயணித்த இலங்கையர் பூஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலிருந்து இத்தாலி நோக்கிப் பயணித்த  msc magnifica  பயணிகளில் கப்பலில் பயணித்த ஒரேயொரு இலங்கையர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு, பூஸா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


அநுர பண்டார ஹேரத் என்ற குறித்த நபர் தொடர்பில் இணையங்களில் செய்தி பரவியதையடுத்து, ஜனாதிபதி செயரகம், கடற்படையினர் உள்ளிட்டவர்கள் இது குறித்து கவனமெடுத்து, இவரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


இவரை கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்து வருவதற்கான அனுமதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கமைய குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மித்த வேளை, அங்கிருந்து கடற்படையினரால், பொறுப்பேற்கப்பட்டு, பூஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .