2025 மே 12, திங்கட்கிழமை

‘அக்கல’உண்ட மூவருக்கு ஆபத்து

Editorial   / 2024 மார்ச் 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலர் அரிசியில் தயாரிக்கப்பட்ட அக்கல சாப்பிட்ட மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீகஹகிவுல கனுகொல்ல கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோமரிக்க கனுகொல்ல கிராமத்தில் வசிக்கும் 14, 34 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலர்ந்த அரிசி, தேங்காய், சீனி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அக்கலவை, ஞாயிற்றுக்கிழமை (17) மாலையில்   உட்கொண்டு தேநீர் அருந்தியுள்ளனர். அதன்பின்னர் அதிக வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X