2026 மே 14, வியாழக்கிழமை

‘அதிக விலை என்பது பொய்’

Editorial   / 2021 ஜூன் 01 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏனைய நாடுகளை விடவும், அதிகளவான நிதியை செலவிட்டு, சீன தடுப்பு மருந்துகளை இலங்கைப் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனத் தெரிவிக்கு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இலங்கைக்கான சீன தூதரகமும் இதனை நிராகரித்துள்ளது என்றார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சீன தடுப்பு மருந்துகளைப்
பெற்றுக்கொள்வதற்கு இலங்கை ஏனைய நாடுகளை விட அதிகளவான நிதியை
செலவிடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இவ்வாறானப்
போலியானக் குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சியின் பொறாமைத் தனத்தையே
வெளிப்படுத்துகிறது என்றார்.

எதிர்க்கட்சியினரின் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சீன தடுப்பு மருந்து
தயாரிப்பு நிறுவனத்திடம் கலந்துரையாடியபோது, அந்த நிறுவனமும்
குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இதேபோல, இலங்கைக்கான சீன தூதரகமும்
இக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளன.

ஏனைய உலக நாடுகளை விட குறைவான விலைகளுக்கு தடுப்பூசிகளை சீனாவிடமிருந்து இலங்கைப் பெற்றுக்கொள்வதாகவும், எனவே இக்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்ட போலியான
ஒன்றாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .