Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தில் பத்து மாதங்களில், ரயிலில் மோதுண்டு 10 யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (09) இரவு வெலிக்கந்தை பிரதேசத்தில், ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் யானையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தால் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, மொத்தம் 5879 யானைகள் இலங்கையில் காணப்பட்டதாகவும், 2018 ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு, இவ்வாண்டுக்கான யானைகள் பற்றிய ஆய்வறிக்கையானது இதுவரை தயாரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு 2017 ஆம் ஆண்டில் 256 யானைகளும் 2018 ஆம் ஆண்டு ஓக்டோபர் முதலாம் திகதி வரையில் 205 யானைகளும் மரணித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.
குறித்த யானைகளது மரணம் தொடர்பில் ரயிலுடன் மோதுண்டு இறத்தல், மின்சாரம் தாக்கப்பட்டு இறத்தல், ஹக்கப்பட்டஸ் கலந்த உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அத்தோடு சேற்றில் புதையுண்டு நிகழ்ந்த மரணங்கள் என, காட்டு யானைகள் பல இவ்வாறான காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுபோலவே, யானைகளின் தாக்குதலால், 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 எனவும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் காலப்பகுதி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 எனவும் தெரிவிக்கப்பட்டதுடன், யானை – மனித தாக்குதல் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்ற இடங்களாக, பொலன்னறுவை, குருநாகல், அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025