2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் விளம்பரப் பலகைகளுக்கு தடை

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரப் பலகை​கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்​கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த விளம்பரப் பலகைகளை அகற்றுவது குறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையால், குறித்த பிரதேசங்களின் கட்டுபாட்டு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் அதன் பராமரிப்பு, நடவடிக்கைப் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை எல்லையிலிருந்து 60 மீற்றர் தூரம் வரை அவ்வாறு விளம்பரப் பலகைகளை காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இதனை கவனத்தில் கொள்ளாமல் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .