2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அனைத்து பூங்காக்களுக்கும் பூட்டு

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள், பூங்காக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என, வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல பூங்காக்களையும் பார்வையிட அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட இடமளிப்பதானது, சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுக்கு முரணான அமையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .