2025 ஜூலை 19, சனிக்கிழமை

அனைத்து முகாம்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து படை முகாம்களையும் ஆய்வு செய்து முகாம்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது. 

முகாம்களில் உள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக செயலணியின் பிரதானி மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகள், சரியாக செயற்படுத்தப்படுகின்றதாக என்று ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறு முகாம்களின் பிரதானிகளை அழைத்து, சுகாதார நடைமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேளை, முப்படையினரின் சகல முகாம்களையும் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, குறித்த செயலணிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X