2025 மே 12, திங்கட்கிழமை

அமைச்சரின் மனைவிக்கு நீதிமன்றம் கடும் கட்டளை

Editorial   / 2024 மார்ச் 21 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு தொடர்பான நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னர் வழங்கிய உத்தரவை மீறியதாகக் கூறப்படும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவியை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தம்புத்தேகம நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.

ஐரங்கனி டி சில்வா என்ற பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபரான அந்த பெண், குருநாகல் மாஎலிய பிரதேசத்தில்   எம்.கே. எக்ரோ இன்டர்ஸியல் எனும் பெயரில் முன்னெடுத்துச் செல்லும் விலங்குகளை பாதுகாப்பும் மத்திய நிலையத்தில்,  பராமரிக்கப்படும் விலங்குகளில் ஆறு பசு மாடுகளை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, தம்புத்தேகம நீதவான் இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய கட்டளையை மீறிவிட்டதாக, அமைச்சரின் மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X