2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அமைச்சர், மகளிடம் கடும் சோதனை

Editorial   / 2024 ஜூன் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ஒருவரும் அவரது மகளும் சட்டவிரோதமான பொருட்களை கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்தத் தகவலை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அவர்களது பயண பொதிகளில் கிடைக்கவில்லை.

அமெரிக்காவில் இருந்து தனது மகளுடன் இலங்கை வந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அதே விமானத்தில் இருந்து வந்த தி​றைச்சேரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரி பொய்யான தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், தகவல் இல்லாமல் சோதனை செய்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக  குற்றம் சாட்டப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X