Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை- ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால், ஒலுவில் பிரதேசத்துக்கு ஏற்படப் கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, இன்று (12) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒலுவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதி ஊடாக, கடந்த 07 நாட்களாக துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலுவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம், சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போரட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒலுவிலை அழிக்காதே, அரசே எங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடு, பாரபட்சம் காட்டாதே, எங்களை காப்பாற்று போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025