Freelancer / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை - அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டால், அதனை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
அம்புலுவாவ பகுதிக்கு அண்மையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கேபிள் கார் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, அம்புலுவாவ கேபிள் கார் திட்டப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் இத்திட்டம் தொடர்பான முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். R
12 minute ago
26 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
43 minute ago