2025 மே 22, வியாழக்கிழமை

அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடு

Thipaan   / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயில் உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவனம் (SAITM), இலங்கை-இந்திய வர்த்தக உடன்படிக்கை, அரச துறை சம்பந்தமான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடுவை வழங்கியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், நேற்று (21) தெரிவித்துள்ளது.

அரசாங்கமானது மேற்கூறப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கத் தவறினால், நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X