2025 மே 22, வியாழக்கிழமை

அரசாங்கத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது

Thipaan   / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கத்தைக் கலைக்க ஜனாதிபதியால் முடியாது. அதேபோன்று, தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை, எதிர்வரும் நான்கரை வருடங்களுக்கு அசைக்கவே முடியாது என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வெலிமடைப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நிமல், 'தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம், இன்னும் ஓரிரு வாரங்களில் கலைந்துவிடும் என சிலர், நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அது அவர்களது கனவு மாத்திரமே. இந்த அரசாங்கத்தை இன்னும் நான்கரை வருடங்களுக்கு அசைக்க முடியாது. இந்த அரசாங்கத்தைக் கலைக்க, ஜனாதிபதியால் கூட முடியாது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தைக் கலைப்பதாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்' என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X