2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

Simrith   / 2025 மே 21 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

சிங்கள மொழி மூலமான (தரம் 1 முதல் 5 வரை) ஆரம்பப் பிரிவில் 4,240 காலியிடங்களும், தமிழ் மொழி மூலமான (தரம் 5) 2,827 காலியிடங்களும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 11 வரை சிங்கள மொழி மூலத்தில் 11,274 வெற்றிடங்களும், தமிழ் மொழி மூலத்தில் 6,121 வெற்றிடங்களும் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .