Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10), பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வி எழுப்பி கருத்துரைத்த சார்ள்ஸ் எம்.பி, “2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சிறையில் உள்ளனர்.
“ஆகவே, இவர்களது விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர், ஒரே மேசையில் அமர்ந்து கட்சி பேதமின்றி கலந்துரையாடலை மெற்கொள்ள முடியுமா?” என வினவியாேதாடு, “2001ஆம் ஆண்டு, பாரதுரமான குற்றமிழைக்காத சிலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும், விடுதலை செய்யப்பட்டனர்.
“அதேபோல், 2002ஆம் ஆண்டிலும் சிலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்த பலர், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்” என்றும் சார்ள்ஸ் எம்.பி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எவ்வாறாயினும், கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025