2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரைக் காற்சட்டை நபரால் பெறும் சர்ச்சை

Janu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ். பல்கலைக்கழகத்திலும் திரையிடப்படுகின்றது. இந்நிலையில், அரைக் காற்சட்டையுடன் செவ்வாய்க்கிழமை (19) வந்த ஒருவரை அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதன்போது அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் உடனிருந்த சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு அதனைக் காணொளி எடுத்து அச்சுறுத்தி பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த பல்கலைக்கழக பதிவாளரும் அதே நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே, ஏமாற்றமடைந்த குறித்த குழு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

குறித்த குழுவினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி,
"யாழ் பல்கலைக்கழகத்தின்  கலாசாரம் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருப்பவர்களின் காற்சட்டையில் தொங்கிக்கொண்டிருப்பது தான் துயரம்" என தெரிவித்து பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடமைக்கு இடையூறு விளைவித்ததன் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது. 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .