2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அர்ச்சுனாவின் எம்.பி விவகாரம்: நீதிமன்றம் நோட்டீஸ்

R.Tharaniya   / 2025 ஜூலை 02 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக,மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (02) அன்று பிரதிவாதிகளுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரே,  மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் 2025  ஆகஸ்ட் 1 அன்று திருப்பியும்  அனுப்பப்பட்டது.மனுதாரர் ஆரம்ப கட்டத்தில் கோரிய இடைக்கால உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

 பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் செனனி தயாரத்ன, தனது கட்சிக்காரருக்கு எதிராக முறையான அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான சமர்ப்பிப்புகளை வழங்கினார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்,இராமநாதன் அர்ச்சுன பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கும் குவோ வாரண்டோ  கோரி இந்த மனுவைதாக்கல் செய்தார்.

இராமநாதன் அர்ச்சுனா , சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும்,எனவே, ஒரு பொது அதிகாரியாக,அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சார்பாக வழக்கறிஞர் ஷெனல் பெர்னாண்டோவுடன் வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன் ஆஜரானார்.

எம்.பி. அர்ச்சுனவுக்காக வழக்கறிஞர் செனனி தயாரத்ன மற்றும் நிஷாதி விக்ரமசிங்க ஆகியோர் ஆஜராகினர்

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .