Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பெஷுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுக் கோரிக்கையை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (11) நிராகரித்தது.
மேற்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர் குழாமினால், இந்தப் பிணை மனுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அத்துடன், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கக்கூடிய விசேட காரணங்கள் எவையும் இல்லையெனக் கூறிய நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, ஏற்கெனவே, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றமும் கொழும்பு மேல் நீதிமன்றமும், இவர்களது பிணை மனுக்களை நிராகரித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்புகளை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, மேற்படி இருவரையும், இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கோட்டை நீதவான் நீதிமன்றம், நேற்று (11) உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025