2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அளுத்கம பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம- மொரகொல்ல பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து, நேற்று (28)  மாலை, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென, அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சடலத்தை களுத்துறை மாவட்ட  திடீர் மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜயநெத்தி சோதனையிட்டதன் பின்னர், களுத்துறை- நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.                                                 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .