Editorial / 2019 ஜூலை 08 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவையும் பாதுகாப்பு சபையும் நேற்று மாலை அவசரமாக கூட்டப்பட்டது.
வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நாளை (9) வெளிநாட்டு செல்லவுள்ளதால், அமைச்சரவை நேற்று கூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கலந்துக்கொள்ளவில்லை என்றும் சனிக்கிழமையே நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் அமைச்சர்கள் தமது சொந்த இடங்களுக்கு, வெவ்வேறு தேவைகளுக்காக கொழும்பிலிருந்து சென்றிருப்பதால், நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வழமையாக புதன்கிழமைகளில் இடம்பெறும் பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026