Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜூன் 26 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி கபில
தங்க ஜெல் உருண்டைகளை தங்களுடைய ஆசன வாயில்களை மறைத்து வைத்து கடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 06 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தமது பயணப்பொதிகள் மற்றும் ஆசனவாய்களில் மறைத்து வைத்தே, தங்க ஜெல் உருண்டைகளை இவர்கள் கடத்தியுள்ளனர். இதன் உள்நாட்டு பெறுமதி, 18 கோடி ரூபாயாகும்.
கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன், மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிப்பவர்களும், அடிக்கடி விமானம் பயணங்களை மேற்கொள்பவர்கள், அவர்களில் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் உள்ளனர்.
அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும், மேலுமிருவர் 22 தங்க ஜெல் உருண்டைகளில் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல்களை மறைத்து வைத்திருந்ததாகவும் விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago