Nirosh / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சதீஸ்)
பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி உள்ளிட்ட இரு பெண்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளான ஆசிரியர் பணியாற்றிவரும் பாடசாலையின்
தரம் 6 - 11 வரையிலான வகுப்புக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான குறித்தப் பாடசாலையின் மாணவியோடு தொடர்பிலிருந்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும் பொகவந்தலாவை பொதுசுகாதாரப் பிரிவில் 105 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 minute ago
13 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
43 minute ago