Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு நகர் பகுதியில் கண்ணகை அம்மன் ஆலய வீதியோரத்தில் நின்றிருந்த ஆடு ஒன்றை லாவகமாக பிடித்து, ஆட்டோவில் கொண்டு சென்று திருடன், காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பியோடிவிட்டார்.
காத்தான்குடியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை நாள் வாடகையாக ஆயிரம் ரூபாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை நகரிலுள்ள கண்ணகை அம்மன் ஆலய பகுதியில் ஆட்டோவில் சென்று அங்கு வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை பிடித்து ஆட்டோவில் கொண்டு கடத்தி சென்றுள்ளார்.
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு ஆட்டோவின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்தனர்.
இதன்போது உரிமையாளர் தனது ஆட்டோவை வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை ஆட்டோவை திருப்பி கொண்டுவர வில்லை என தெரிவித்து ஆட்டோவை தேடியபோது பள்ளிவால் ஒன்றுக்கு அருகில் வீதியில் ஆட்டோ மற்றும் அதன் ஆவணங்கள் இருந்தன. எனினும், ஆட்டோவை விட்டு விட்டு திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் ஆட்டோ உரிமையாளரை கைது செய்ததுடன் ஆட்டோவை மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
07 Sep 2025
07 Sep 2025
07 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 Sep 2025
07 Sep 2025
07 Sep 2025