Janu / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை (31) அன்று இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதலின் போது, சுமார் 17 கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்கரைப் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் புவனேக நடத்திய இந்த சிறப்பு தேடுதலின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், நச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த 26 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

48 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
01 May 2026