Nirosh / 2021 பெப்ரவரி 20 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆ.ரமேஸ்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்குவதற்காக இறுதி முடிவு எடுக்க நேற்று (19) தொழில் அமைச்சில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ''தேயிலை மற்றும் இறப்பர் தொழிற் துறை தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயை நாட்சம்பளமாக வழங்க கடந்த 8ஆம் திகதி சம்பள நிர்ணைய சபையில் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியுமென கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆட்சேபனை தொடர்பில் கிடைக்கப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வை பெற்றுக்கொள்ளவே இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதநிதிகள் தரப்பில் 8 பேரும், பெருந்தோட்ட கம்பனிகள் தரப்பில் எட்டு பிரதிநிதிகளும், அரசாங்க தரப்பில் மூன்று பிரதிநிதிகள் என மொத்தமாக 19 பேர் கலந்துக்கொள்ள வேண்டும்.
எனினும் நேற்றையப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும், அரசாங்கம் சார்பில் 3 பேரும் கலந்துக்கொண்டிருந்த நிலையில் கம்பனிகள் சார்பில் வெறும் ஒருத்தரே கலந்துக்கொண்டிருந்தார். எனவே பேச்சுவார்த்தையை முன்னெடுக்க கம்பனிகள் தரப்பில் கோரம் இல்லாத நிலையில், பேச்சுவார்ததை திகதி அறிவிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.“ என்றார்.
கம்பனிகள் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தமை தொழிலாளர்களுக்குக் கிடைத்தத் தோல்வி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026