Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, மல்வத்து பீடத்தால் வழங்கப்பட்டுள்ள ‘சாஸன கீர்த்தி ஸ்ரீ தேசாபிமானி’ என்ற உயரிய விருதுக்காக, சபையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று (21) ஆரம்பமாகி, வாய்மூல கேள்விகள் முடிவடைந்த பின்னர், தனக்கு இரண்டு நிமிடம் ஒதுக்கித்தருமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக, இந்த உயரிய சபையின் தலைவரான, சபாநாயகருக்கு அண்மையில் மல்வத்து பீடத்தால் வழங்கப்பட்ட உயரிய விருதுக்காக தனது வாழ்த்தை தெரிவித்தார்.
அத்துடன், சபாநாயகருக்கு ஜப்பானில் வழங்கப்பட்ட விருது தொடர்பிலும், அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட விருது தொடர்பிலும் அவர் பாராட்டினார்.
இதனையடுத்து, எழுந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சி சார்பில் தனது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், சிறந்த பௌத்தர் என்ற ரீதியில் சபாநாயகருக்கு மல்வத்து பீடத்தால் விருது வழங்கப்பட்டுள்ளமைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார்.
அத்துடன், பௌத்த மதத்தை மேலும் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மஹிந்த அமரவீர, சபாநாயகரை பார்த்து, உங்களது அத்தனை எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டுமென்றார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பந்துல குணவர்தன, நிஹால் கலப்பதி ஆகியோரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.
கடந்தாண்டு இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியின் போது, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, தைரியமாக முன்னெடுத்த செயற்பாடுகளே இவ்வாறான விருதுகள் கிடைக்க காரணமெனவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் இதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக, சபை முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025