Editorial / 2019 நவம்பர் 02 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நாற்பதாண்டு காலமாக மலையகத்தில் பல அமைச்சுக்களை வைத்திருந்தவர்கள், கால்நடை அபிவிருத்தி அமைச்சை வைத்துக்கொண்டு மக்களுக்கும், மாடுகளுக்கும் எதுவும் செய்யவில்லை எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கால்நடை அமைச்சை வைத்திருந்தவர்கள் மக்கள் நலன்பெற எந்தவொரு மாட்டுப் பண்ணையையும் அமைக்கவில்லை. அதில் மலையக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்கவில்லை. எனினும், மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு எனும் அமைச்சை உருவாக்கி அதன் மூலம் நான்கே ஆண்டுகளில் நாம் பல புதிய கிராமங்களை அமைத்துக் காட்டியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அய்யா காலத்தில் இருந்தே வீடுகளை அமைப்பதாக அறிக்கை மட்டும் விடுவார்கள். அவர்கள் கிராமங்களை அமைந்திருந்தால் நாங்கள் ராகலையில் அமைத்துவரும் 'ராமலிங்கநகர்' போன்ற ஒன்றை காட்டட்டும் பார்க்கலாமெனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026