2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இடைக்கால அரசாங்க விவகாரம்; ‘ஐ.தே.க தனிவழி’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

ஒன்றிணைந்த எதிரணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு முற்பட்டால், அதற்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, தனித்து ஆட்சியமைக்குமெனக் குறிப்பிட்ட அக்கட்சியின் எம்.பியான துஷார இந்துனில் அமரசேன, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிக்கு அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.

பலத்தை வெளிகாட்டும் அவசியம், ஒன்றிணைந்த எதிரணிக்கு இருந்தால், அடுத்த வரவு - செலவுத் திட்டத்தைத் தோற்கடித்துக் காட்டுமாறும், அவர் சவால் விடுத்தார்.

ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த இந்துனில் எம்.பி, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில், விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான முயற்சிகளுக்கு, ஐ.தே.க, ஒருபோதும் அஞ்சாதென்றும் கூறினார்.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், இவ்வாறான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்த அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, மஹிந்தவை பிரதமராக்குவதாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரம், அண்மையில் இடம்பெற்ற எதிரணியின் ஆர்ப்பாட்டம் போன்ற அனைத்தும், தோல்வியிலேயே முடிவடைந்ததாகவும் கூறினார்.

எனவே, ஒன்றிணைந்த எதிரணி, நாளாந்தம் மக்கள் மத்தியில் புதிய கருத்தாடலைத் தோற்றுவிக்கும் நோக்கத்திலேயே செயற்படுவதாகவும் இவ்வாறானவர்களுடன், சுதந்திரக் கட்சியினர் இணைந்து கொள்வார்களாயின், அவர்கள் வெட்கமற்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என்றும், அவர் கூறினார்.

“மஹிந்தவின் ஊழல் ஆட்சிக்கு எதிரானவர்களே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வந்தனர். அதனால், சுதந்திரக் கட்சியின் 16 பேரடங்கிய அணி, மஹிந்த அணியுடன் இணைந்து கொண்டாலும், ஊழல் மோசடிக்கு எதிரான சு.க உறுப்பினர்கள், எம்முடனேயே இணைவார்கள்.

“எனவே, சுதந்திரக் கட்சியிலுள்ள சிலரும் ஒன்றிணைந்த எதிரணியினரும் இணைந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்வார்களாயின், அவர்களுக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி, தனித்து ஆட்சியமைக்கும்.
அதேநேரம், ஒன்றிணைந்த எதிரணிக்கு தனது பலத்தை நிரூபிக்க வேண்டுமெனில், அண்மையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்ததைத் தோற்கடித்து காட்டட்டும்” என்றும் அவர் சவால் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .