2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இணையத்தளம் வேண்டும் என்கிறார் பிமல் எம்.பி

Kanagaraj   / 2016 மார்ச் 08 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

காணாமல்போனோர் தொடர்பில் இணையத்தளமொன்றை ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, அந்த இணையத்தளத்தில் காணாமல்போனவர்களின் படங்களை பதிவேற்றம் செய்தால் அவை விசாரணைகளுக்கும் உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'பரணகம ஆணைக்குழுவுக்கு 23 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில், இதுவரையில் 700 முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு விசாரணை நடந்;தால் அது முடிவடைவதற்கு 60 வருடங்கள் செல்லும்' என்றார்.

'காணாமல்போனோர் விவகாரத்தைக் கையாள்வதற்கு தனியான பணியகமொன்று விரைவில் நிறுவப்பட வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.

'எட்கா ஒப்பந்தத்துக்கு அரசாங்கம் காட்டும் ஆர்வத்தை, காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் விடயத்தில் காட்டவில்லை.

காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இது நல்லவிடயம். நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகை ஏற்புடையதல்ல. இது வெட்கக்கேடான செயலாகும்.

ஐக்கிய நாடுகள் சபை சொல்கின்றதோ, இல்லையோ போர்க்குற்ற விசாரணை கட்டாயமாக நடத்தப்படவேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .