2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்து மயானத்தில் ஆயுதங்கள்; தேடுதலில் களமிறங்கியுள்ள பொலிஸார்

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க

வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் அகழ்வுப்பணியை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிவான் வி.இராமக்கமலனின் அனுமதியைப் பெற்று, வவுனியா பொலிஸாரின் உதவியுடன், குறித்த மயானத்தில் அகழ்வுப்பணிகள், இன்று புதன்கிழமை (04) இடம்பெற்று வருகின்றன.

இந்து மயானத்தில் 3 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தொல்பொருள் ஆய்வுத்திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், சமாதான நீதிவான் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணிகள் இடமபெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X