Freelancer / 2025 நவம்பர் 07 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை நேற்று (07) புதுடில்லியில் சந்தித்தார்.
கடல்சார் இணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் நவீன மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
தகவல் பரிமாற்றம், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் இங்கு வலியுறுத்தியுள்ளார். (a)

33 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
46 minute ago