2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம் -மனோ

Editorial   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் "என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சுமார் 130 கோடி சனத்தொகை கொண்ட பாரத தேசம், இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறுகின்றது. இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்ணீர் எமக்கு தெரிகிறது. இது கொரோனா சுனாமி அவலம் என கூறப்படுகின்றது.    

எமது நாட்டிலும் இந்த  கொரோனா கொடுமை புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. நாட்டின் சுகாதார துறையினருக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலம் இதை நாம் எதிர் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை பொறுப்புடன் செயற்படுமாறு கூறும், அதேவேளை பொதுமக்களாகிய நாமும் பொறுப்புடன் நடந்து இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.  

மிகப்பெரிய சனத்தொகையை கொண்டுள்ள எமது மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவில், ஒட்டு மொத்த சனத்திரளின் மத்தியில் வீரியமுள்ள கொரோனா கிருமிகள் வேகமாக பரவி வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாரதம் இந்த கொடுமையிலிருந்து விரைவில் மீள வேண்டும் என்ற நோக்கில் நாம் நமது வீடுகளில் இருந்தபடி பிரார்த்தணைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .