Nirosh / 2021 பெப்ரவரி 20 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் நேற்று(19) சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (20) நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம். பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே நான் கருதுகின்றேன். நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.ஷ
20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரவிந்த குமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்துக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் பதிலளித்திருப்பதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுத் தொடர்பில் மீள பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படுமெனவும், இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகள் 20 ஐ ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. ஆகவே அது தொடர்பில் பேசாது மலையக மக்கள் முன்னணியின் உள்விவகாரத்தில் மாத்திரம் தலையிடுவது எந்த வகையில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“போத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் என்பது ஜனநாயக போராட்டமாகும். ஆனால் தற்போது அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை விசாரிப்பது மக்கள் போராட்டத்தை நிராகரிப்பதாகும். ஆமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்துக்கு உள்ளேயே இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு நடகமாகும். மேலும் இந்தியாவை பகைத்துக் கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது.“ எனவும் தெரிவித்தார்.
18 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 Jan 2026
21 Jan 2026