2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இனிய பாரதியின் இரு சகாக்கள் அங்கும் இங்கும் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிய பாரதியின் சகாவான கல்முனையைச் சோந்த டிலக்ஷன்  சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பிரதேச சபை தவிசாளரின் மனைவி சிஐடியிடம் முறைப்பாடு செய்திருந்தார்

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவில் வைத்து இனிய பாரதியும் அவரது சகாவான மட்டு. சந்திவெளியைச் சேர்ந்த சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை  2007-6-28 சம்பவதினம் வீட்டில் இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்த போது அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீசி படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  இனிய பாரதியின் சகாக்களான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷன் மற்றும்  வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்த   வன்னியசிங்கம் பரமேஸ்வரன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையம் விசாரணைக்காக சிஐடி யினர் கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

கனகராசா சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .