S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானில் இன்று வியாழக்கிழமை (04) மாலை 6.14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது.
குளிர் முழு நிலவாக காட்சியளிக்கும் நிலவு, வழக்கத்தை காட்டிலும், கூடுதல் பிரகாசமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வானில் நிலவின் பிரகாசம் மற்றும் வடிவம் மாறி தோன்றும் நிகழ்வு அதிசயமாக கருதப்படுகிறது.
அந்தவகையில், வானில் இன்று வியாழக்கிழமை (04) மாலை 6.14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது.
நிலவு, குளிர் முழு நிலவு (புல் கோல்ட் மூன்) என்ற நிலையை அடைய உள்ளது. அதாவது வழக்கத்தை காட்டிலும் 14 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் ஒளிர உள்ளது.
இந்த பவுர்ணமி தினத்தில், நிலவானது பூமியில் இருந்து 3.57 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரவுள்ளது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தொலைவு, இந்த நாளில் 10 முதல் 14 சதவீதம் குறைவாக இருக்கும்.
இவ்வாறு தொலைவு குறைவதே, நிலவு கூடுதல் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம். இந்த பிரகாசம், நாளை வெள்ளிக்கிழமை (05) அதிகாலை 4.44 மணிக்கு உச்ச நிலையை அடையும்.
கடந்த 2023இல் இந்த குளிர் முழு நிலவு தோன்றிய நிலையில், அடுத்து 2028ஆம் ஆண்டு தான் இந்த நிகழ்வு நிகழும்.
8 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago