R.Tharaniya / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1,289 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் மண்சரிவு மற்றும் தொடர்புடைய பாதிப்புகளால் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (04) அன்று காலை நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை அடையாளம் காண்பது முறையான மற்றும் வெளிப்படையான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு நிதி அமைச்சின் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
இழப்பீட்டு செயல்முறைக்கு அவசியமான துல்லியமான தரவுகளை திறம்பட சேகரிப்பதற்கான ஒரு சிறப்பு பொறிமுறையை நிறுவுமாறு அவர் மேலும் பணித்தார்.
அதிக ஆபத்துள்ள மற்றும் பேரிடர் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற பேரிடர்களால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளை ஆதரிப்பதற்காக நம்பகமான தரவுகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
9 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago