2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இன்று வருகிறார் அலிஸ் வெல்ஸ்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், இன்றைய தினம் (09), இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இ​லங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளைப் பலப்படுத்தல் மற்றும் இந்து - பசுபிக் வலயங்களின் கூட்டிணைவை உறுதிப்படுத்திக்கொள்ளல் போன்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே, அவரது இந்த விஜயம் அமையவுள்ளதென, இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது அவர், அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இலங்கையின் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், மனித உரிமைப் பாதுகாப்பு, மறுசீரமைப்பு, நிலைமாறுகால நீதி வழங்கல் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், அவர் இதன்போது அவதானம் செலுத்தவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .