2025 மே 19, திங்கட்கிழமை

இரசாயன எண்ணெய், உர விற்பனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட இரசாயன எண்ணெய் மற்றும் உர வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

தடை செய்யப்பட்ட இரசாயன எண்ணெய் மற்றும் உரத்தில் கதிரியக்க சக்தியானது அதிகளவில் சேமிக்கப்படுவதனாலும் கட்மியம் போன்ற பார உலோகங்களின் சேர்க்கையினாலும் சிறுநீரக நோய்களின் தாக்கம் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் மற்றும் பேலியகொடையில் அமைந்திருக்கும் உரக்களஞ்சியசாலைக்கும் அறிவித்தல்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X